ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக விவசாயிகள் வயலில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள, வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து, டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாருர் மாவட்டம் கோட்டூரில், பருத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக, கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, உடனடியாக வேதாந்தா நிறுவனத்திற்கு, வழங்கிய உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும், எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.