செவ்வாய், 21 மே, 2019

இணையதள குற்றங்களை தடுப்பது குறித்த விவகாரத்தில் கால அவகாசம் கேட்டு ட்விட்டர் மனு! May 21, 2019


Image
இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்த கால அவகாசம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் மனுதாக்கல் செய்துள்ளது. 
சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டது. மேலும், இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி மே 27ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்நிலையில், ஆலோசனை நடத்துவதற்கான தேதியை ஜூன் முதல் வாரம் வரை நீட்டித்து கால அவகாசம் வழங்க கோரி ட்விட்டர் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.