Zomato டெலிவரி பாய் ஒருவர், Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு கொடுத்து உதவுவது அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் பதிக்ரித் சஹா. இவர், கொல்கத்தாவில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் இவரிடம் பணம் கேட்டபோது, பணம் தர மறுத்து அவனை அடித்து துரத்தியுள்ளார். பின்னர் தன் தவறை உணர்ந்த சஹா, அரசு வேலையை விட்டு ஏழை குழந்தைகளுக்கு உதவி சேய்யவேண்டும் என முடிவெடுத்து, ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்துள்ளார். ஆரம்பித்த சில நாட்களில் பல மாணவர்கள் இவரிடம் பாடம் கற்க தொடங்கினர்.
அதே சமயத்தில் குடும்பத்தை கவனிக்கவேண்டும் என்ற காரணத்தால், Zomatoவில் டெலிவரி பாய் வேலைக்கு சேர்ந்தார். Zomato-வில் சேர்ந்த சில நாட்களிலேயே, கொல்கத்தாவில் இருந்த ஒரு உணவக உரிமையாளரிடம் பேசி மீந்து போகும் உணவுப்பொருட்களை சேகரித்து ஏழை குழந்தைகளுக்கு வழங்க தொடங்கினார். அவ்வாறு தான் தொடங்கியது இவரின் பயணம், பின்னர், சில தினங்கள் கழித்து, Zomato நிறுவனத்திடம் கேட்டு, பயனாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டு பின், Cancel செய்யப்பட்ட உணவுப்பொருட்களை ஏழை குழந்தைகளுக்கு வழங்கினார்.
அவர் வருவதை பார்த்தாலே அப்பகுதியில் உள்ள குழந்தைகள், அவரை மகிழ்ச்சியாக வரவேற்பதாக கூறப்படுகிறது. இந்த காலத்திலும், ஏழைகளுக்கு உதவுவதற்காக அரசு பணியை துறந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பதிக்ரித் சஹாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.