புதன், 22 மே, 2019

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட் 2-பி! May 22, 2019


Image
ராணுவத்திற்கு பயன்படக்கூடிய ரிசாட் 2-பி செயற்கைகோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று அதிகாலை 5.27 மணிக்கு, PSLV C46 ராக்கெட் மூலம், ரிசாட் 2-பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 557 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு தனது செயல்பாட்டை ரிசாட் 2-பி தொடங்கி உள்ளது. 
இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ராணுவ பயன்பாடு, எல்லை பகுதிகளை கண்காணித்தல், ராணுவத்துக்கான தகவல் தொழில்நுட்பம், நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிப்பது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த செயற்கைகோள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜூலை 9ம் தேதியில் இருந்து 16ம் தேதிக்குள் சந்திராயன் - 2  விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இது இஸ்ரோவுக்கு மிகவும் சவாலான பணி என்றும் கூறினார்.