ஞாயிறு, 19 மே, 2019

காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு! May 19, 2019

Image
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு முன்பாக இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழிந்தார். 
ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான முனிரத்னாவின் வீட்டின் முன்பாக இன்று காலை சுமார் 9 மணி அளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது, முனிரத்னாவின் வீட்டிற்கு முன்பாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வெங்கடேஷ் என்பவர் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த வெங்கடேஷின் மகள், முனிரத்னாவின் வீட்டில் வேலை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தடயங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.