வியாழன், 30 மே, 2019

இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Pray_for_Neasamani ஹேஷ்டேக்! May 29, 2019

சமூக வலைதளங்களில் #Pray_for_Neasamani ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்டாகி வருகிறது.
பொதுவாக சமூக வலைதளங்ளில் எப்போது என்ன ட்ரெண்டாகும் என்பதை கணிக்கவே முடியாத ஒன்றாகும், அதே போல் சமூக வலைதள வாசிகளையும் புரிந்து கொள்ள முடியாது. சமிபகாலமாகவே யார் சர்ச்சையில் சிக்கினாலும், அவர்களை வருத்தெடுத்து ட்ரண்டாக்கி வருவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர் நெட்டிசன்கள். 
குறிப்பாக  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்களோ இல்லையோ நடிகர் வடிவேலு எப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் இருப்பார் என்று கூறும் அளவுக்கு வடிவேலு முகத்தைப் பார்க்காமல் உங்களால் சமூக வலைதளங்களைக் கடந்துவந்து விடமுடியாது. மீம் கிரியேட்டர்களுக்கு தெய்வமாக இருப்பவர் என்றே கூறலாம். மீம்ஸ்கள் என்றால் அதற்கு அரசன் வடிவேலு தான் வடிவேலுவை தவிர்த்துவிட்டு நீங்கள் மீம்ஸ்கள் போடவே முடியாது. அப்படி நடப்பது, நடக்கவிருப்பது, நடந்தது. என எல்லாவற்றிற்கும் ஏற்கனவே நமக்கு கண்டென்ட் கொடுத்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்
தேர்தல் முடிந்துவிட்டது ஐபிஎல்லும் முடிந்துவிட்டது என்று கான்சப்ட் கிடைக்காமல், இருந்த சமூக வலைதளவாசிகளுக்கு கிடைத்த ஒரு மெகா பரிசுதான் #Pray_for_Neasamani ஹேஷ்டேக். 
01
தற்போது #Pray_for_Neasamani ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. 
அப்படி என்னதான் ஆச்சு நேசமணிக்கு, நேசமணி ஹேஷ்டேக்கை யார் ஆரம்பித்தது என்று பார்த்தால்,
`Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம்தான் இதற்கு அஸ்திவாரம் இட்டிருக்கிறது. இந்த பக்கத்தில் ஒரு சுத்தியல் படத்தைப் பதிவிட்டு `உங்கள் ஊரில் இதற்கு என்ன பெயர்' என கேட்கப்பட்டுள்ளது, இதற்கு விக்னேஷ் என்பவர், இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது. பாவம் எனப் பிரபல ஃப்ரெண்ட்ஸ் பட காமெடி காட்சியினை நினைவுபடுத்தி கமண்ட் செய்துள்ளார்.
02
கான்சப்ட் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த நெட்டிசன்கள்  அனைவரும் ஒன்று கூடிவிட்டனர். பிரேக்கிங் நியூஸ் டெம்ப்ளேட் வீடியோ முதல் பலவிதமாக இதை பதிவிட தொடங்க இந்த #Pray_for_Neasamani ஹேஷ்டேக் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் வைரலானது. தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.