செவ்வாய், 28 மே, 2019

இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்: தமிழக அரசு May 28, 2019

Image
காவிரியில் இந்த வார இறுதிக்குள் 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது. 
டெல்லியில் மத்திய நீர் ஆணைய அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஆணையர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழகம், கேரளாவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை அடுத்து பிப்ரவரி முதல் மே மாதம் வரை கர்நாடகா வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு உரிய 9.2 டிஎம்சி தண்ணீரை வழங்க ஆணையிட வேண்டும் எனவும், தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்தை இனி எந்த ஒரு கூட்டத்திலும்,  எப்போதும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தமிழகம் சார்பில்,  வலியுறுத்தப்பட்டது.