செவ்வாய், 28 மே, 2019

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்”- ராமதாசை விமர்சித்து முரசொலியில் கட்டுரை...! May 28, 2019

Image
மக்களவைத் தேர்தல் படு தோல்வியிலும் பெருமிதம் பேசுவதில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நிகர் ராமதாசேதான் என முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தியதே தவிர எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்தை விமர்சித்து  “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்” என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. 
அதில், பல தலைமுறைகளை பலப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு வர வேண்டியது எல்லாம் ராமதாசுக்கு வந்து விட்டதாகவும்,  தோல்வியை முன்னரே கணித்து மாநிலங்களவை சீட்டை ராமதாஸ் ஏற்கனவே ரிசர்வ் செய்து விட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.  சொத்துக்களை விற்று தேர்தலை சந்தித்த பாட்டாளி சொந்தங்களின் வலி எப்படி ராதாசுக்கு தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளது.
திமுகவின் தயவால் அன்புமணி அமைச்சராக இருந்தார் என்பதை மறந்துவிட்டு ராமதாஸ் தற்போது பேசி வருவதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது பத்து அம்சத்திட்டத்தை கூறி அதிமுகவோடு ராமதாஸ் கூட்டணி வைத்ததை குறிப்பிட்டுள்ள முரசொலி,  அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றுவீர்களா என்றும் ராமதாசிடம் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.