வெள்ளி, 31 மே, 2019

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு! May 31, 2019

Image
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ஜூன் 3-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் எதிர்பார்த்த வகையில் குறைந்தபாடில்லை. 
இதனால், பள்ளிகள் திறக்க காலதாதமாகும் என தகவல்கள் சமீபத்தில் வெளிந்தன. ஆனால், இதற்கு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்ததோடு திட்டமிட்டி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். 
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால் பள்ளிகளை திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. 
இதன் எதிரொலியாக மாணவ, மாணவிகளின் நலன்கருதி அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 3 ம் தேதிக்கு பதில் 10-ம் தேதி திறக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.