உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர், மகிழ்ச்சியாகவோ, கோவமாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தாலோ காஃபி அருந்திவிட்டுதான் அடுத்த வேலைக்கு செல்வர். இன்னும் சிலருக்கோ, காஃபி அருந்தாமல் எந்த வேலையும் ஓடாது. இன்னும் சிலரோ அடிக்கடி காஃபி அருந்துவர்.
இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், காஃபி அருந்துவது உடலுக்கு நல்லதா தீங்கா என்ற பல கேள்விகள் நம்முள் வந்துபோகும். அதற்கான சரியான விடை கொடுக்க முடியாமல் திணறிய மருத்துவர்கள், இறுதியாக அதற்கான விடையை கண்டுபிடித்துவிட்டனர்.
ஒரு நாளில், 6 அல்லது 6-க்கு மேற்பட்ட கப் காஃபி குடிப்பது உடலுக்கு கெடுதியை விளைவிப்பதோடு இருதய கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் American Journal of Clinical Nutrition வெளியிட்ட ஆய்வு முடிவுகள் கூறுகிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபி அருந்தலாம் என்பதை தெளிவாக கூறுவது இதுவே முதல்முறை.
காஃபியில் இருக்கும் Caffeine என்ற வேதிப்பொருள், குறிப்பிட்ட சில அளவை தாண்டும்போது ரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு 6-க்கும் குறைவான கப் காஃபி குடிப்பதே சரியானது என காஃபி குறித்து ஆய்வுசெய்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் தீமை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை அறிந்து அதற்கேற்பவாறு உணவு உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.