செவ்வாய், 14 மே, 2019

அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு! May 14, 2019


Image
நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், சில மாவட்டத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி முனை பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குடநாட்டில் 4செ.மீ மழையும், திண்டுக்கல் நத்தத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மேலும் கோவை பெரியநாயக்கன்பாளையம்,ஈரோடு,மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 2செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவித்து இருந்த நிலையில் அதன் நிலை மாறியது. எனவே இன்று அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை, ஆனால் நாளை முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்,அதிகபட்சமாக 36டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.