source ns7.tv
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக உள்மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறையில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி மேல் பதிவாக கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.