திங்கள், 20 மே, 2019

சிகரெட் புகையை விட ஆபத்தானதா அகர்பத்தி? May 20, 2019


பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் பூஜை செய்யும் நேரங்களில் அகர்பத்தி பொருத்திவைப்பது வழக்கம். நல்ல மணம் மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சியை தருவதால் அகர்பத்தியை வீடுகள் மற்றும் கோயில்களில் ஏற்றி வைக்கின்றனர். 
ஆனால், அகர்பத்தியில் இருந்து வரும் புகையை சுவாசிப்பது உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு சீனாவின் Springer's journal Environmental Chemistry, அகர்பத்தி புகையை சிகரெட் புகையுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்மூலம், அகர்பத்தியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பல இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சிகரெட்டில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் அகர்பத்தியிலும் இருப்பது தெரியவந்துள்ளது.
காற்றோட்டம் இல்லாத அறைகளில், அதிக அளவில் அகர்பத்திகளை ஏற்றுவது DNAவில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், mutagenic, genotoxic, cytotoxic போன்ற நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொருட்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகர்பத்தி
நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் பல அகர்பத்தியில் இருப்பதால், அதனை மிக கவனமாக பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், புகையிலை, சிகரெட் போன்றவற்றை விட ஆபத்தானதா என்பது குறித்து இன்னும் தெளிவாக கூறவில்லை.