மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது வன்முறை நிகழ்ந்த விவகாரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணியில், சிலர் கம்புகள் மற்றும் கற்கள் வீசியதால் வன்முறை உருவானதாக கூறப்படுகிறது. மேலும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாறி, மாறி பரஸ்பர புகார் அளித்தனர்.
இந்நிலையில் கலவரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது 2 பிரிவுகளில் கீழ் கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.