செவ்வாய், 28 மே, 2019

2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு! May 28, 2019


2000 ஆண்டுக்குப் பின் அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. 
 
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில், 2000ம் ஆண்டுக்கு பிறகு B.E முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாமல் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மீண்டும்  தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு நவம்பர்/ டிசம்பர் 2019, ஏப்ரல்/ மே 2020 செமஸ்டர் தேர்வில் சிறப்பு தேர்வு கட்டணத்தை செலுத்தி இதுவரை பட்டம் முடிக்காத பழைய மாணவர்கள் தேர்வு 
எழுதலாம் என சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
 
இதேபோல், 2001-ம் ஆண்டுக்குப் பின்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் படித்து, படிப்பை முடிக்க முடியாத மாணவர்களுக்கு வரும் நவம்பர்/டிசம்பர் 2019 மற்றும் ஏப்ரல்/மே 2020 ஆகிய இரண்டு செமஸ்டர்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறைகளின்படி தேர்வு கட்டணத்தை செலுத்தி வர உள்ள இரண்டு செமஸ்டர்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.