செவ்வாய், 14 மே, 2019

தகுதித் தேர்வுகளில் இடஒதுக்கீடு முறை கூடாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம் May 14, 2019

Image
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தவிதமான இடஒதுக்கீடும் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நாடு முழுவதும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்கப்படாது என்றும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற நடைமுறையே கடைபிடிக்கப்படும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜனவரி மாதம் 16-ம் தேதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது, தகுதித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தகுதிச் தேர்வுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், அது முற்றிலும் தவறானதாகிவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது முற்றிலும் தகுதியாவதற்கான தேர்வு மட்டுமே என்று கூறிய நீதிபதிகள், இடஒதுக்கீடு என்ற நடைமுறை சேர்க்கையின்போது மட்டுமே கணக்கிடப்படும் என்று குறிப்பிட்டனர்.