வெள்ளி, 31 மே, 2019

உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! May 31, 2019

Image
உளவு பார்த்து நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்தில் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு அதிகாரிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜாவீத் பிஜ்வா இக்பால், உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ராணுவ கோர்டில் ரகசியமாக நடைபெற்று வந்த வழக்கின் முடிவில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது.
இதே போல உளவு பார்த்த மற்றொரு வழக்கில் பிரிகேடியர் (ஓய்வு) ரிஸ்வான் என்பவருக்கும் ராணுவ மருத்துவரான அக்ரம் என்பவருக்கு ராணுவ சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர்கள் எந்த வகையான தகவல்களை யாருக்கு பறிமாற்றம் செய்தனர் போன்ற தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை.
இந்த தகவலை பாகிஸ்தான் ராண்வ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூரும் உறுதி செய்துள்ளார். இரண்டும் தனித்தனி விவகாரங்கள், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தரவுகளின்படி கடந்த 10 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உளவு பார்த்த குற்றச்சாட்டின் பாகிஸ்தான் ராணுவம் தண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது