வெள்ளி, 31 மே, 2019

தீவிரமடையும் சாக்பீஸ் தயாரிப்பு! May 31, 2019

Image
பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி தருமபுரி அருகே சாக்பீஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
கோடைகாலம் முடிந்து வருகின்ற ஜீன் மாதம் 3 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருக்கின்றன. இதையொட்டி நோட்டு புத்தகங்கள், அட்டைகள் மற்றும் ஸ்கூல் பேக்குகள் விற்பனை சூடுபிடித்து வருகின்றது.
இந்நிலையில், தருமபுரி, வெள்ளிசந்தை, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை தொழிலாக சாக்பீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சாக்பீஸ் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. எட்டு வண்ணங்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பெட்டிகள் வரை சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. அவை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 
குறிப்பாக, இங்கு தயாரிக்கப்படும் சாக்பீஸ்கள் கர்நாடக மாநிலத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால் அம்மாநிலத்திற்கு  அதிகளவில்  ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும்  ஜூன் மாதம்  பள்ளிகள் திறப்பதற்குள்  சாக்பீஸ் தயாரித்து அனுப்பும் பணி துவங்கி விடும், அதற்க்காக  இந்தாண்டு கடந்த மாதம் முதல் சாக்பீஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது