குன்னூரில் காட்டெருமை தாக்கி இருவர் காயமடைந்ததால், ஆத்திரமுற்ற மக்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்துகளை சிறைபிடித்து, 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குன்னூர் அருகேயுள்ள கொலக்கம்பை கிராமத்தை சுற்றி அடர்ந்த தேயிலை தோட்டங்களில், அண்மை காலமாக காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தூதூர்மட்டம் கிரேக்மோர் பகுதியில் புகுந்த காட்டெருமைகளை, வனத்துறையினர் விரட்டும் போது, தோட்டப்பணிகளில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், தனலட்சுமி மற்றும் சுருதி ஆகியோரை தாக்கியதில் இருவரும் காயமுற்றனர்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினரையும், அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பேருந்துகளையும் சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். வனச்சரகர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், சமூக தீர்வு ஏற்பட்டதையுடுத்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்