திங்கள், 20 மே, 2019

மாணவர்களின் ரூ.278 கோடி கல்விக்கடனை ஏற்பதாக அறிவித்த கோடீஸ்வரர்! May 20, 2019


Image
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த விருந்தினர் ஒருவர் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் ரூ.278 கோடி கல்விக் கடனையும் ஏற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உள்ளது புகழ்பெற்ற Morehouse கல்லூரி. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக Robert F Smith அழைக்கப்பட்டிருந்தார். Vista Equity Partners என்ற பங்குச்சந்தை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். இவர் கருப்பினத்தை சேர்ந்தவர் ஆவார்.
விழாவில் உரையாற்றிய Robert F Smith, இந்த நாட்டில் 8 தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களது வாழ்வில் சிறிய அளவில் எரிபொருளை நாங்கள் தர உள்ளோம். உங்கள் அனைவரின் கல்விக் கடனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் கல்விக் கடனை செலுத்தத்தேவையில்லை என்று அதிரடியாக அறிவித்தார்.
ஸ்மித்தின் பேச்சை கேட்ட மாணவர்களும், பெற்றோர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். சிலர் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.
அந்த கல்லூரியில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்விக் கடன் இந்திய மதிப்பில் சுமார் 278 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த major aaron என்ற மாணவர் இந்த விழாவிற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் நான் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு கடனை வங்கிக்கு செலுத்த வேண்டும் என ஒரு கணக்கு போட்டுப் பார்த்தேன். எனது கடன் தொகையான $2,00,000-யினை பாதி சம்பளப் பணத்தைக் கொண்டு 25 ஆண்டுகள் செலுத்த வேண்டும் என்பதை அறிந்தேன். ஆனால் இப்போது ஒரே நொடியில் எனது கடன் அனைத்தையும் ஸ்மித் அடைத்துவிடுவதாக பொறுப்பேற்றுள்ளார். என்னால் உணர்ச்சியை அடக்க முடியாமல் அழுதுவிட்டேன் என்றார்.
முன்னதாக இதே கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு ஸ்மித் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

source ns7.tv