தாளவாடி அருகே ஜீரகள்ளி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானைகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த போதும் ஒரு சில பகுதிகளில் வறட்சி காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஜீரகள்ளி வனப் பகுதியில் மழை குறைந்தததால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதனால், தண்ணீர், உணவு தேடி, காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.