
இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் எச்சரித்துள்ளார்.
செண்டலங்கார மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது மடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் லஞ்சம் பெற்று கொண்டு, இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வருவதாக குற்றம் சாட்டினார். இந்து அமைப்புக்கள் இணைந்து, கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கமல்ஹாசன் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள பிரதமர் மோடி, உலகமே ஒரு குடும்பம் என்பதே இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என குறிப்பிட்டுள்ளார்.