செவ்வாய், 14 மே, 2019

ஒரே வாட்ஸ் அப் காலில் மொபைல் Hack செய்யப்படும் ஆபத்து: அம்பலமானது பாதுகாப்பு குளறுபடி! May 14, 2019


Image
பாதுகாப்பு குளறுபடி கண்டறியப்டுள்ளதால் உடனடியாக செயலியை அப்கிரேட் செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இன்கம்மிங் கால் வாயிலாக ஒட்டுமொத்த மொபைல் ஃபோனும் ஹேக் ஆகக்கூடிய ஆபத்து குறித்து வாட்ஸ் அப் கண்டறிந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் சைபர் இணைய உளவு நிறுவனமான NSOவானது, வாட்ஸ் அப் செயலியை அடிப்படையாகக் கொண்டு உளவு மென்பொருள் ஒன்றினை உருவாக்கியது. வாட்ஸ் அப் கால் வாயிலாக ஒட்டுமொத்த மொபைலையும் ஹேக் செய்யக்கூடிய வகையில் அது உருவாக்கப்பட்டிருந்தது. யாருடைய மொபைலை ஹேக் செய்ய வேண்டுமோ அவர்களது வாட்ஸ் அப்பில் கால் செய்தால் போதுமானது, அவர்கள் போனை எடுக்காவிட்டால் கூட அந்த மென்பொருள் அந்த மொபைலில் பதிவிறக்கமாகிவிடும். எங்கிருந்து யாரால் இது அனுப்பப்படுகிறது என்பது கூற தெரியாது. இது ஆண்ட்ராய்ட் மட்டுமல்லாமல் ஐ-போன்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மென்பொருள் பதிவிறக்கம் ஆகும் மொபைலின் கேமரா, மைக்ரோஃபோன் போன்றவற்றை அது ஆன் செய்து இ-மெயில், மெஸேஜ்கள், லொகேஷன் போன்ற தகவல்களை திரட்டிவிடும். 
இந்த மாத தொடக்கத்தில் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து கண்டறியப்பட்டுள்ளது எனவும் எத்தனை பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை, வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களது செயலியை அப்டேட் செய்துகொள்வதுடன், மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என வாட்ஸ் அப் அறிவுறுத்தியுள்ளது.