பூமி மற்றும் நிலவுக்கு இடையேயான தூரத்தை துல்லியமாக கணிக்கும் வகையில், சந்திராயன்-2 விண்கலத்தில் நாசாவின் கருவியை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்கான அனுப்பப்பட்ட சந்திராயன்-1 விண்கலம், நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை அனுப்பியது. சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சந்திரயான்-2 திட்டம் ஜூலை ஒன்பது முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திராயன்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர் விக்ரம், ரோவர் பிரக்யான் என்ற அதிநவீன சாதனங்களில் 13 வகையான தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விண்கலத்தில் நாசாவின் PASSIVE EXPERIMNTAL கருவியும் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. இந்தக் கருவி மூலம் பூமி மற்றும் நிலவுக்கு இடையேயான தூரத்தை துல்லியமாக கணக்கிட பயன்படும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது