ஞாயிறு, 26 மே, 2019

குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சி... ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்...! May 26, 2019

Image
குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
உதகையில் மலர் கண்காட்சி நிறைவு பெற்ற நிலையில், கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியான 61வது இருதின பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது. சுமார் ஒன்றரை டன் அளவிலான பழங்களை கொண்டு அலங்கரித்து வைத்திருந்த ராட்சத வண்ணத்துப்பூச்சி, அசோக சின்னம், மயில், மற்றும் மாட்டுவண்டி உள்ளிட்ட மாதிரி வடிவங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 
பலா, மாதுளம், சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை உட்பட பல்வேறு பழங்களை கொண்டு, வளமையான தமிழகம் என்பதை வலியுறுத்தும் வகையிலான அரங்குகளையும்,  அந்தந்த மாவட்டங்களில் விளையும் பழங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அவற்றை செல்போனில் பதிவு செய்து மகிழ்ந்தனர். 
மேலும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் வண்ண மயமான மேற்கத்திய நடனம், பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பழக்கண்காட்சியில் இடம்பற்ற அரங்குகள் மற்றும், இன்னிசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை கண்டு மகிழ்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், பார்வையாளர் கவரும் வகையில்  பழ அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.