புதன், 15 மே, 2019

நம் வீடுகளில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? May 15, 2019


Image
கோடை காலத்தில் பெரும்பாலானோர் வீடுகளில் ஏசி பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக குளு குளுவென நம் வீட்டை வைப்பதற்கு கோடை காலங்களில் ஏசி பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இதே சமயத்தில், ஏசியை முறையான பாதுகாப்புடன் பயன்படுத்தாவிட்டால், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகம். ஆதலால் ஏ.சியை நம் வீடுகளில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்கிற சந்தேகத்திற்கான விடை இதோ...

➤ஏசி  தொழில்நுட்ப வல்லுனரின் அறிவுரையின் படி, வீட்டின் அளவு மற்றும் மின்சார வசதியை பொறுத்து, சரியான அளவு ஏ.சி-யை வைக்க வேண்டும்.
➤Ventilation Unit எனப்படும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஏ.சி-யின் பாகம் பாதுகாப்பான, திறந்த வெளியில் இருக்க வேண்டும்.
➤சீரான இடைவேளையில் ஏ.சியில் உள்ள வடிகட்டி தூசியை சுத்தம் செய்வது அவசியம்.
➤நாம் தூங்கும் அறையில் குளிரின் அளவு சரியாக வரவில்லை என்றால் உடனடியாக ஏ.சி  மெக்கானிக் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
➤பெரும்பாலும் இன்வர்ட்டர் மூலம் ஏசியை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 
➤ஏசி யூனிட்கள் மற்றும் வயர்களை வெப்பம் நிறைந்த பகுதியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் .
➤ஏசி மற்றும் மின்சாதன பொருட்கள் அதிக திறன் கொண்டது என்பதால், அதனை தினமும் சரிபார்ப்பது நல்லது. 
➤கோடை காலங்களில் ஏசி பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், அவ்வப்போது ஏ.சி-யை சர்வீஸ் செய்ய வேண்டும்,