செவ்வாய், 14 மே, 2019

கோட்சே குறித்து கமல்ஹாசன் கூறிய உண்மை பாஜகவுக்கு கசக்கிறது - ஜவாஹிருல்லா May 14, 2019


Image
கோட்சே குறித்து கமல்ஹாசன் கூறிய உண்மை பாஜகவுக்கு கசக்கிறது என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண  அரசை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குழுவுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்  ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் நாக்கை வெட்ட வேண்டும் என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
மேலும் தனது பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் பேசிய ராஜேந்திர பாலாஜியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.


Related Posts: