திங்கள், 20 மே, 2019

சாகுபடி செலவிற்கு கூட வருவாய் கிடைக்கவில்லை என சூரியகாந்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை! May 20, 2019

Image
சங்கரன் கோவிலில் சூரியகாந்தி பயிரிட்டுள்ள தங்களுக்கு சாகுபடி செலவிற்கு கூட வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். தற்போது, சூரியகாந்தி நல்ல மகசூலை அளித்துள்ள நிலையிலும் உரிய விலைக்கு விற்பனை ஆகாததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
மேலும் ஒரு லிட்டர் சூர்ய காந்தி சமையல் எண்ணெயின் விலை 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அதன் மூலப்பொருளான சூர்ய காந்தி விதையின் விலை மட்டும் அதிகரிக்கவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Posts: