திங்கள், 27 மே, 2019

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியில் தொடரும் காட்டுத் தீ! May 27, 2019

Image
சங்கரன்கோவில் அருகே மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
பொதுவாக கோடைகாலம் தொடங்கினாலே மலைகள் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ பரவுவது என்பது வாடிக்கையான ஒன்றாகும். பல நேரங்களில் இது போன்ற காட்டு தீ ஏற்படுகின்ற பொழுது பெரிதும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் சேதம் ஏற்படுவதில்லை. 
சில நேரங்களில் மனிதர்கள் யாரேனும் மலைப்பகுதிகளில் சுற்றுலாவோ அல்லது மலையேறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது குரங்கணி தீ விபத்து.  மேலும், குறிப்பாக இதுபோன்ற நேரங்களில் மனிதர்களை காட்டிலும் விலங்குகளின் நிலமை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, கரடி, மான், மிளா, உடும்பு, காட்டுமாடு உட்பட பல அரிய வகையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளன. செல்லுப்புலி, நாரணாபுரம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. இப்பகுதியில் காற்று பலமாக அடித்து வருவதால் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 
இதனால் பல்வேறு அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை வைத்து காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Posts:

  • பாலைவனத்தில், ஒரு பகுதியை காட்டி, பாலைவனத்தில், ஒரு பகுதியை காட்டி, "நாளை முதல் இந்த இடம் உனக்கு சொந்தம்" என்று அமீரகவாசியிடம் கூறியது, அல் அய்ன் நகர முனிசிபாலிடி.அந்த அரபியோ "இந்த… Read More
  • மோடி 3000 பேரை கொல்லும் போது இந்து மதத்தைக் குற்றம் சுமத்தவில்லை... ஹிட்லர் யூதர்களை கொல்லும் போது கிறிஸ்துவ மதத்தைகுறை சொல்லவில்லை... பெஞ்சமின… Read More
  • தேவையில்லை !!!!!!!!!!!!!!!!!!!! எங்களுக்கு லஞ்சமும் தேவையில்லை !எங்களின் நெஞ்சத்தில் வஞ்சமும் இல்லை !ஜாதி மத இனமொழிப் பேதமில்லை !நற்ப்பெயரும் தேவையில்லை !புகழும் தேவையில்லை !ஆனாலு… Read More
  • சீலா மீன் சீசன் துவக்கம் ! ராமநாதபுரம் மாவட்ட க‌ட‌ல்ப‌குதியில் பிடிப‌டும் ருசி மிகுந்த மீன்க‌ள்! வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. file(old) pictures. source. Nazeerudeen… Read More
  • ஏற்றுமதி & இறக்குமதி முன்னுரை:ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் இறக்குமதி வணிகமும் ஆரம்பிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஏற்றுமதி வணிகம் போலவே, … Read More