புதன், 15 மே, 2019

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கியுள்ள 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர்! May 15, 2019


Image
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாமல் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கி கோவையைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் குமாரசாமி சாதனை படைத்துள்ளார். 
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் குமாரசாமி. பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் பூங்காவில், என்.ஜி ஆட்டோமொபைல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 11ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு, ஆட்டோ மொபைல் துறையில் இருந்த அனுபவமும், புதியவற்றை கண்டுபிடிக்கும் ஆர்வமும், ஹைட்ரன் ஹையர் எஃபிசியன்ஸ் என்ஜினை உருவாக்க உதவியது. 10 ஆண்டுகால ஆராய்ச்சியின் பலனாக ஹைட்ரஜன் எரிபொருளை கண்டுபிடித்து அசத்தியுள்ள சவுந்தர்ராஜன் குமாரசாமி, இதனை பயன்படுத்தி கார் முதல் கப்பல் வரை அனைத்தையும் இயக்க முடியும் என்கிறார். 
இந்தியாவில் 25 சதவீதம் பேர் காற்று மாசால் உயிரிழக்கும் நிலையில், 80 சதவீத நுரையீரல் பாதிப்புக்கு வாகனங்கள் வெளியிடும் புகையே காரணமாகின்றன. அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த எஞ்ஜின் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சவுந்தர்ராஜன் குமாரசாமி, இந்த கண்டுபிடிப்புக்கு இந்தியாவில் உரிமம் கிடைத்தாலும், சரியான ஆதரவு கிடைக்காததால் ஜப்பானில் அந்நாட்டு அரசின் உதவியுடன் தொழிற்சாலையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்., 
உலக அளவில் பெட்ரோல், டீசலுக்கான இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கிய சவுந்தர்ராஜன் குமாரசாமியின் தொழில் நுட்பத்தை இந்திய அரசும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்கள்,  தொழில்முனைவோர்களின் கோரிக்கையாக உள்ளது.