வெள்ளி, 28 ஜூன், 2019

விண்வெளி ஆய்வு மையத்தில் 2 மாதங்கள் தங்க ஒரு அரிய வாய்ப்பு...! செலவு என்ன தெரியுமா? June 14, 2019

Image
சுற்றுலா செல்ல அருவிகள், மலைப்பிரதேசங்கள் என பல இடங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஏற்பாடுகளையும் மிக கவனமாக செய்வோம். ஆனால், தற்போது விண்வெளியையே சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில், விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொதுமக்களை சுற்றுலாவிற்காக கூட்டிச்செல்ல Bigelow Space Operations என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, பொதுமக்களில் 16 பேரை தேர்ந்தெடுத்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டு, அதற்கான கட்டணத் தொகை குறித்த விவரத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

space
அதன்படி, ஒன்றில் இருந்து இரண்டு மாதம் வரை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருப்பதற்கு 52 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், 360 கோடி) செலவாகும் என Bigelow நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் Space X ராக்கெட்டில் மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
space st1
இதனைத்தவிர வேறு எந்த தகவல்களையும் வெளியிடாத Bigelow, Space X நிறுவனத்தின் ராக்கெட்டில் பயணம் செய்ய விண்வெளிக்கு செல்ல ஆர்வம் காட்டும் மனிதர்களை அனுப்புவதாக மட்டும் தகவல் தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு செல்ல பல மனிதர்கள் ஆர்வம் காட்டினாலும், அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஏற்றவாறு மட்டுமே அமைந்திருப்பது சாதாரண மக்களிடையே  பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
credit ns7.tv