கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் சார்பில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிலாடஸ் நிறுவனத்திடமிருந்து 75 பயிற்சி விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. ரூ.2,896 கோடி மதிப்பீட்டிலான இந்த ஒப்பந்தத்தை பெருவதில் ரூ.339 கோடி லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டதாக கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில் 3 ஆண்டுகள் தொடர் புலனாய்வுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளரும் பிரபல ஆயுத வர்த்தகருமான சஞ்சய் பண்டாரி, பிமல் சரீன், பெயர் குறிப்பிடாத விமானப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அண்மையில் ராபர்ட் வதேரா விசாரிக்கபப்ட்டாலும் கூட அவரது பெயர் FIRல் பதிவு செய்யப்படவில்லை.
Offset India Solutions நிறுவனத்தின் இயக்குனர்களான சஞ்சய் பண்டாரி மற்றும் பிமல் சரீன் ஆகியோர் இந்த கொள்முதல் விவகாரம் தொடர்பாக ஜூன் 2010ல் இந்நிறுவனத்திற்கும், சஞ்சய் பண்டாரிக்கு இடையே
சேவை வழங்குநர் ஒப்பந்தம் ஏற்படுத்தினர். இது பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளுக்கு எதிரானதாகும்.
சேவை வழங்குநர் ஒப்பந்தம் ஏற்படுத்தினர். இது பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளுக்கு எதிரானதாகும்.
இந்த பேரத்திற்காக ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 2010ல் இரண்டு முறை Offset India Solutions நிறுவனத்தின் கணக்கில் பிலாடஸ் நிறுவனம் 350 கோடி ரூபாய் வரவு வைத்துள்ளது.
இதே போல அக்காலகட்டத்தில் விமானப்படை மற்றும் பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்த செல்வாக்குமிக்க அதிகாரிகள் சிலருக்கு கமிஷன் தொகை கைமாற்றப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மே 2012ம் ஆண்டு அப்போதைய மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கும், ஸ்விட்சர்லாந்தின் பிலாடஸ் நிறுவனத்திற்கும் இடையே 75 பயிற்சி விமானங்கள் வாங்கும் 2,896 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதன்முதலாக கடந்த 2016ம் ஆண்டு இந்த விவகாரத்தை கையிலெடுத்த அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது, தற்போது சிபிஐ அமைப்பும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சஞ்சய் பண்டாரியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. சஞ்சய் பண்டாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது ராபர்ட் வதேராவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.