பருவநிலை மாற்றம் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், கிரீன்லாந்து தீவில் ஒரே நாளில் 200 கோடி டன் பனி உருகியுள்ளது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தகிப்பது தமிழகம் மட்டுமல்ல; உலகமும் தான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது பருவநிலை மாற்றம். சுற்றுச்சூழல் மாசு, காடுகள் அழிப்பு போன்ற இயற்கைக்கு எதிரான செயல்கள் தான், பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதன் விளைவாக, உலகின் பல இடங்களில் பனித்தீவுகள் மாயமாகி வருகின்றன.
வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிரீன்லாந்து, உலகின் அதிக பனிக்கட்டிகள் கொண்ட பனிப்பிரதேசங்களில் ஒன்று. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, இங்குள்ள பனிக்கட்டிகள் வெப்பத்தால் உருகும். குறிப்பாக, ஜூலை மாதத்தில் அதிகளவில் பனிக்கட்டிகள் உருகுவது வழக்கம்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்தாண்டு தொடக்கத்திலேயே பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருகின்றன. மொத்தமுள்ள பனிக்கட்டிகளில், 40 சதவீதத்துக்கும் அதிமான பனி, ஒரே நாளில் உருகியதுதான் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த வெள்ளியன்று மட்டும், 200 கோடி டன் எடை கொண்ட பனி உருகியுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.