சனி, 22 ஜூன், 2019

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் - மேதா பட்கர் June 22, 2019

Image
இயற்கை வளங்களை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பசுமை தீர்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகள், செயல்படாமல் தடுக்கப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டும் என கூறினார். ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில், ஏழைகளின் குடிசைகள் அகற்றப்படுவதாகவும், ஆனால், பெரிய கட்டடங்களை அகற்ற யாரும் முன்வருவதில்லை எனவும் கூறினார்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரவுள்ள சட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் எதிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.