செவ்வாய், 25 ஜூன், 2019

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிட திமுக முடிவு? வெளியாகும் தகவல்கள்! June 25, 2019

Image
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடும் முடிவுக்கு திமுக வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சபாநாயகர் கடந்த ஏப்ரல் மாதம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அளித்திருந்தார். வரும் 28ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கைவிடும் முடிவிற்கு திமுக வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் அந்த தீர்மானம் நிறைவேற சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவைப்படக்கூடிய ஒரு சூழலில் அந்த தீர்மானத்தை கைவிடும் முடிவிற்கு திமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விட வேறு வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திமுக திட்டமிட்டுள்ளதாவும் தெரிகிறது. 
முன்னதாக, 28ம் தேதி கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்போமென டிடிவி தினகரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv