வியாழன், 20 ஜூன், 2019

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்! June 20, 2019

Image
வீராணம் ஏரியில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
ஏரியின் முழுக் கொள்ளளவான 47.50 அடியை நீர் மட்டம் எட்டியது. எனினும், தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு மட்டுமே நாள்தோறும் வினாடிக்கு 40 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. நீர் மட்டம் தற்போது 43.06 அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து கடும் வெப்பம் நிலவுமானால், இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீரை அனுப்ப முடியும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.