கீழடி அகழ்வாராய்ச்சி பணி நடைப்பெறும் பகுதிகளில், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி, கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் 5 மீட்டர் ஆழத்திலேயே மண்ஓடுகள், மண் பானைகள் மற்றும் அழகு பானைகள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் அப்பகுதியை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள், ஆர்வ மிகுதியால் செல்பி எடுக்கும்போது ஒரு சிலர் தவறி விழுந்து பணிகள் பாதிக்கும் சூழல் நேரிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அப்பகுதி பொதுமக்கள் புகைப்படம், வீடியோ எடுக்க தொல்லியல் துறை சார்பாக தடை விதிப்பட்டுள்ளது.