ஞாயிறு, 23 ஜூன், 2019

ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல்! June 23, 2019

Image
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால், கட்சியின் புதிய தலைவராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முன்வந்த நிலையில், அதனை ஏற்க மூத்த தலைவர்கள் மறுத்து வந்தனர். எனினும், தனது ராஜினாமா முடிவில் ராகுல் உறுதியாக இருப்பதால், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
காங்கிரஸின் புதிய தலைவராக ராஜஸ்தான் முதலமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts: