குடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காக மதத்தின் பெயரில், அதிமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், எண்ணிவிட முடியாத அளவிற்கு, அனைத்து திசைகளிலும் மக்கள் பிரச்னை இருப்பதாக கூறினார். ரேஷன் கடை, பள்ளிக்கூடங்களை மூட நினைக்கும் அரசு, பெண்களின் கோரிக்கையான டாஸ்மாக் கடையை மூட மறுப்பது ஏன்?, என கனிமொழி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை, அது திமுக ஏற்படுத்தும் மாயை, என்று மனசாட்சி இல்லாமல் முதல்வர் பழனிசாமி பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், நீர், நிலைகளை தூர்வாரமால், கோவில்களில் பூஜை செய்து அதிமுக அரசு மக்களை ஏமாற்றுவதாகவும் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நேற்று, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாநில அரசுடன் இணைந்து செயல்படத்தயார் என தெரிவித்தார்.