செவ்வாய், 18 ஜூன், 2019

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அபராதம், உரிமம் ரத்து! June 17, 2019

Image
பிளாஸ்டிக் தடை விவகாரத்தை மிக கடுமையாக அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மண்ணையும், நீரையும் மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் தடை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அமலுக்கு வந்தாலும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்ந்து கொண்டே  வருகிறது. 
இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் நடைமுறை, தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறையாக பிடிபடும்போது, 2 லட்சம் ரூபாயும், 2-வது முறையாக பிடிபட்டால் 5 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
3-வது முறை பிடிபட்டால் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். 
இதேபோல், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், முதன்முறையாக பிடிபடும் போது 50 ஆயிரம் ரூபாயும், 
மீண்டும் பிடிபட்டால் ஒரு லட்சம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும். 
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும், அபராதம் செலுத்த நேரிடும். முதல் தடவை 500 ரூபாயும், மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டால் ஆயிரம் ரூபாயும், அபராதம் வசூலிக்கப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.