வியாழன், 27 ஜூன், 2019

அனல்மின் நிலைய ஊழியர்களிடம் காட்டமாக பதில் அளித்த கர்நாடக முதல்வர்! June 27, 2019

Image
ஊதிய உயர்வு கேட்ட அனல்மின் நிலைய ஊழியர்களிடம், பிரதமர் மோடியிடம் போய் கேளுங்கள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி காட்டமாக பதில் அளித்தார். 
கர்நாடகா முதல்வர் குமாரசாமி கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். நேற்று ராய்ச்சூர் மாவட்டம் காரகுடா பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தை வழிமறித்த அனல்மின் நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
இதனால் ஆத்திரம் அடைந்த முதல்வர் குமாரசாமி ''நீங்கள் வாக்களித்த மோடியிடமே போய் கேளுங்கள்'' என காட்டத்துடன் கூறினார். பின்னர் காரகுடா பகுதிக்கு சென்ற குமாரசாமி நேற்று இரவு அங்குள்ள பள்ளியில் தங்கினார். 
credit ns7.tv

Related Posts: