கேரள மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென்மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் வைகை அணை முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைகை அணை நீர் மட்டம் 31. 04 அடியாக உள்ளது.
அதன்படி, அணையின் நீர் இருப்பு 412 மில்லியன் கன அடியாகும். தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
credit ns7.tv