உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராத நிலையில், நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலையும், இருதய சிகிச்சைக்காக ஒரு மணி நேரம் உடல் பரிசோதனை மேற்கொண்டார். தண்ணீர் பிரச்சனை தொடர்பாக நேற்று நடைபெறவிருந்த ஆய்வுக் கூட்டம் முதல்வரின் உடல்நலக்குறைவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் அவர் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உடல்நலப்பரிசோதனை மேற்கொண்ட நிலையில், இன்று இருதய பரிசோதனை மேற்கொண்ட முதல்வர், பரிசோதனை நிறைவடந்த பின்னர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.