சனி, 22 ஜூன், 2019

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! June 22, 2019

Image
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தனியார் பள்ளிகள், தண்ணீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை பத்திரிகை வாயிலான அறிந்ததாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகி உறுதி செய்த பின்னரே, பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுவருவதாக பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் நலனை பாதிக்கும் வகையில் விதிகளுக்கு முரணாக தனியார் பள்ளிகள் செயல்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இருந்தால், மாற்று ஏற்பாடுகளை செய்து பள்ளிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.  அவ்வாறு செயல்பட தவறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகளை கண்காணிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளது.