திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகாவில் 4 வழிச்சாலை அமைக்க விளைநிலங்களை கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சிவகிரியில் இருந்து செங்கோட்டை வரையில் நான்கு வழிசாலை அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக விளைநிலங்களை கையகப்படுத்தி நில அளவை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
4 வழி சாலை அமைப்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சிவகிரி - தென்காசி பிரதான சாலையோரம் அமைந்துள்ள விளைநிலங்களில் விவசாயிகள் தங்கள் கையில் தேசியக் கொடி ஏந்தி போராட்டபத்தில் ஈடுபட்டனர்.
credit ns7.tv