நாகை அருகே மின் இணைப்பு வழங்கப்படாததால் ஒரு கிராமமே இருளில் மூழ்கியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் கிராமம் அமைந்துள்ளது. இங்கே வயல் வெளிகளில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் ஊராட்சிக்கு சொந்தமான வள்ளுவர் சாலை வழியே மின்கம்பங்களை நட்டு மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே கஜா புயலால் வயல் வெளிகளில் நடப்பட்டிருந்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. ஆனால் அதன் பிறகு விவசாயிகளின் கோரிக்கைபடி வள்ளுவர் சாலை வழியே மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதோடு மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் பயன்பாடின்றி கிடக்கின்றன. மின்சாரம் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.
credit ns7.tv