செவ்வாய், 2 ஜூலை, 2019

வைரலாகி வரும் அரசு மருத்துவமனை ஊழியர் பேச்சு! July 02, 2019

Image
மது அருந்த காசு கொடுத்தால் தான் கட்டுப் போடுவேன் என அரசு மருத்துவமனை ஊழியர் பேசும் வாட்ஸ் அப் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பேரூராட்சிகள், நாயக்கன்பாளையம், பிளிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தினமும் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம். 
இந்த நிலையில் இங்கு வேலை பார்க்கும் மருத்துவமனை ஊழியர் தடாகத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 50) என்பவர் மருந்து மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ கட்டு போடுவதற்கு என அங்கு வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொள்வதாக புகார் எழுந்ததுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட வந்தவர்களிடம் கட்டிங் காசு தந்தால் தான் கட்டு போடுவேன். வா இப்பவே வாங்கலாம், நான் இங்கு இருக்கிறவரைக்கு யாருக்கும் பயப்படவேண்டியது இல்லை என்று கூறுவதை அவர்கள் செல்போன் கேமராவில் பதிவு செய்துள்ளனர். 
தற்போது முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

credit ns7.tv