வியாழன், 4 ஜூலை, 2019

அமித்ஷா வழியில் திமுகவை மு.க.ஸ்டாலின் நடத்துவதாக கூறப்படும் கருத்துக்கு முரசொலி எதிர்ப்பு! July 04, 2019

credit ns7.tv
Image
பாஜக தலைவர் அமித்ஷா வழியில் திமுகவை மு.க.ஸ்டாலின் நடத்திச் செல்வதாக வெளியான விமர்சனங்களுக்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரைக்கு முரசொலி நாளிதழில் கண்டனம் தெரிவித்துள்ளது. அமித்ஷாவின் இயக்கம் தனி, அவரின் அரசியல் கட்சித் தனி கூறியுள்ள முரசொலி,  இயக்கம் அங்கே கட்சியை நடத்துவதாகவும், ஆனால் திமுக இயக்கமும், கட்சியுமாக இருக்கிய அமைப்பு என்றும் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. 
திமுகவில் எஜமானனும், ஊழியனும் ஒருவரே என்று கூறியுள்ள முரசொலி, சித்தாந்த ரீதியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவிற்கு நேரெதிரான அமைப்பு திமுக என சுட்டிக்காட்டியுள்ளது. 107 ஆண்டுகள் பின்னணி கொண்ட திமுக, அதன் முன்னோர் நிறுவிய கொள்கைகளை இன்றும் பின்பற்றுவதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ள முரசொலி, டெல்லி சென்று அமித்ஷாவிடம் ஆலோசனை பெறுவதற்கு திமுக என்ன, அதிமுகவா என்றும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. 
திமுகவின் கொள்கை என்பது வேதாந்தம் அல்ல என்று கூறியுள்ள முரசொலி, வேதாந்தத்தை சித்தாந்தமாகக் கொண்டவர்களின் வழியை திமுக ஏற்காது என்று தெரிவித்துள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி காட்டிய வழியிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியை நடத்தி வருவதாகவும் முரசொலி நாளிதழ் தெரிவித்துள்ளது.