மத்திய அமைச்சரவை ஒப்புதலை அடுத்து, இந்தியா - மாலத்தீவு இடையே பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்றபின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றபோது, இரு நாடுகள் இடையே கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், பாதுகாப்பு உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அதனடிப்படையில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கவுள்ளது.
கொச்சியிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாலோவுக்கு குல்குதுபுசி அடோல் வழியாக கப்பல்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
credi ns7.tv