நீட் தேர்வு முடிவு கடந்த ஜூன் 5ந்தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. 3 ஆயிரத்து 968 மருத்துவ படிப்பு இடங்களுக்கு மொத்தம் 68 ஆயிரத்து 20 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
தரவரிசைப் பட்டியலின்படி, திருவள்ளூர் மாணவி ஸ்ருதி, முதலிடம் பெற்றுள்ளார். சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி நடைபெறும் எனவும், ஜூலை 9ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியல் விபரம் சுகாதாரத் துறை இணையதளத்தில் www.tnhealth.org வெளியிடப்பட உள்ளது
credit ns7.tv